தவளை

தவளைகள்
புதைப்படிவ காலம்:220–0 Ma
PreЄ
Pg
N
திராசிக் முதல் தற்போது வரை
White's Tree Frog (Litoria caerulea)
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கு
தொகுதி:முதுகுநாணி
வகுப்பு:நிலநீர் வாழிகள்
வரிசை:அனுரா (Anura)
Merrem, 1820
துணைவரிசைகள்

Archaeobatrachia
Mesobatrachia
Neobatrachia
-
List of Anuran families

உலகில் தவளைகள் வாழும் இடங்கள் (கருப்பு நிறம்)

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்ட வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1].

கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது

தவளைகள் வெப்ப வலயப் பகுதி முதல் ஆர்க்டிக்கின் கீழ்ப்பகுதி வரையான உலகின் பல்வேறு சூழற்பகுதிகளிலும் உள்ளன. எனினும் இவற்றின் பல்வேறு இனங்கள் மழைக்காடுகளிலேயே மிகுந்து உள்ளன. 6,300 க்கும் மேலான தவளை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இருவாழ்வி இனங்களின் மொத்த எண்ணிக்கையில் 88% ஆகும்.

இவை சூழலோடு ஒன்றித் தெரியும் பழுப்பு, பச்சை வண்ணங்களிலும் எடுப்பான மஞ்சள், சிவப்பு வண்ணங்களிலும் உள்ளன. வளர்ந்த தவளைகள் நன்னீரிலும் வறண்ட நிலத்திலும் வாழ்கிறது. எனினும் சில தவளையினங்கள் மரத்திலும் தரைக்கடியிலும் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளன.

தவளைகள் நீரில் முட்டையிடுகின்றன. வளர்ந்த பெண் தவளையானது ஒரு சமயத்தில் இரண்டில் இருந்து 50,000 முட்டை வரை இடும். [2]முட்டை பொரிந்து தலைப்பிரட்டை உருவாகிறது. பின்னர் அது வளர்ந்து தவளையாக உருப்பெறுகிறது. வளர்ந்த தவளைகள் பொதுவாக ஊனுண்ணிகளாகும். எனினும் தாவரங்களையும் உண்ணும் சில அனைத்துண்ணித் தவளைகளும் உள்ளன. தவளைகள் பலவகையான ஒலிகளை, குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் எழுப்புகின்றன.

காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8233923.stm
  2. "LiveScince". www.livescience.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2020.

புற இணைப்புகள்தொகு

"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=தவளை&oldid=2962207" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)