டெமோக்கிரட்டிசு

பண்டைய கிரேக்க மெய்யியலாளர்

டெமோக்கிரட்டிசு (Democritus, கிரேக்க மொழி: Δημόκριτος, Dēmokritos, "மக்களின் தேர்வு") (கி.மு. ஏறத்தாழ 460 – ஏறத்தாழ 370) கிரேக்க நாட்டின் அப்டெர்ரா, திரேசில் பிறந்த தொன்மை கிரேக்க மெய்யியலாளர் ஆவார்.[1] இவர் சாக்கிரடிசுக்கு முந்தைய தாக்கமிக்க மெய்யியலாளராகவும் அண்டத்தில் அணுத்தன்மையை வழிமொழிந்த லெசிப்புசின் சீடராகவும் இருந்தார்.[2]

டெமோக்கிரட்டிசு
டெமோக்கிரட்டிசு
பிறப்புஏறத்தாழ கிமு 460
அப்டெரா, திரேசு
இறப்புஏறத்தாழ கிமு 370 (அகவை 90)
காலம்சாக்கிரடிசுக்கு முந்தைய மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிசாக்கிரடிசுக்கு முந்தைய மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல் / கணிதம் / வானியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
அணுத்தன்மை, தொலைவிடத்து விண்மீன் கோட்பாடு
செல்வாக்குச் செலுத்தியோர்
  • லெசிப்புசு, சமோசின் மெலிசுசு
செல்வாக்குக்கு உட்பட்டோர்

இவரது பங்களிப்புகள் இவரது குரு லெசிப்புசுவின் பங்களிப்புகளுடன் பிணைந்துள்ளதால் இவரது ஆக்கத்தை மட்டும் பிரித்தறிய இயலாது உள்ளது. இவர்களது அணுத்தன்மை குறித்தான முன்னறிதல்கள் அணுக்கருனி கட்டமைப்பு குறித்த 19வது நூற்றாண்டு புரிதல்களுடன் ஒத்துள்ளன. இதனால் டெமோக்கிரட்டிசை மெய்யியலாளராக நோக்காது அறிவியலாளராகவும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும் இரு கருதுகோள்களும் முற்றிலும் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை.[3] டெமோக்கிரட்டிசு தொன்மை ஏதென்சால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டாலும் அதே வடபகுதியில் பிறந்த மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலால் நன்கு அறியப்பட்டிருந்தார். பிளேட்டோ இவரை மிகவும் வெறுத்து இவரது அனைத்து நூல்களையும் எரிக்க விரும்பினார்.[1] பலரும் டெமோக்கிரட்டிசை "தற்கால அறிவியலின் தந்தை" எனக் கருதுகின்றனர்.[4]

டெமோக்கிரட்டிசு கிரேக்கத்தின் திரேசு பிராந்தியத்தின் தென்பகுதியில் உள்ள அப்டீரா என்ற நகரில் பிறந்தார்.[5] செல்வந்தரான இவரின் தந்தை விட்டுச் சென்ற பரம்பரையை சொத்தை செலவழித்து தொலைதூர நாடுகளுக்குச் சென்று தனது அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். இவர் ஆசியாவிற்கு பயணம் செய்தார், மேலும் இந்தியா மற்றும் எத்தியோப்பியாவை அடைந்ததாகக் கூறப்படுகிறது.[6] பல நாடுகளை சுற்றிவந்த பிறகு இவர் மெய்யியல் ஆய்வில் ஈடுபட்டு வாழ்வு முழுவதும் அதில் செலவழித்தார். அணுக்கள் பலவற்றின் சேர்கையினாலேயே உலகத்தின் சகலமும் தோன்றுகின்றன என்றார். எனவே இவரை அணுவாதத்தின் தந்தை என்கின்றனர்.

இவர் பல துறைகள் குறித்து ஆய்வு செய்து புதிய கருத்துகள் வெளியிட்டார். கணிதம், பௌதிகம், வானியல், பூகோளம், உடற்கூறியல், உளவியல், மருத்துவம், இசை, சிற்பம் போன்றவை குறித்து பல நூல்களை இயற்றினார்.

மேற்சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Russell, pp.64–65.
  2. Barnes (1987).
  3. Stephen Toulmin and June Goodfield, The Architecture of Matter (Chicago: University of Chicago Press, 1962), 56.
  4. Pamela Gossin, Encyclopedia of Literature and Science, 2002.
  5. Aristotle, De Coel. iii.4, Meteor. ii.7
  6. Cicero, de Finibus, v. 19; Strabo, xvi.

மேலும் அறியதொகு

வெளி இணைப்புகள்தொகு

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "டெமோக்கிரட்டிசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Democritus and Leucippus - thebigview.com
  • Diogenes Laërtius, Life of Democritus, translated by Robert Drew Hicks (1925).
"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=டெமோக்கிரட்டிசு&oldid=3582798" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)