ஐரோப்பா

கண்டம்

ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.[1]

உலக வரைபடத்தில் ஐரோப்பாவின் அமைவிடம்
அரசியல் வரைபடம்

ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும்.[2] ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.

ஐரோப்பாவின் ஆளுமைதொகு

16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன.[3] பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "வார்சோ ஒப்பந்த" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது,முன்னைய வார்சோ ஒப்பந்தநாடுகள்பலவற்றையும்இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது.

வரைவிலக்கணம்தொகு

"ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப்பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது.[4][5] பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா,லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார்.[6] முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார்[7] யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத்தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது.[8]

கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு,கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது.[9] இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டுஅடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறைபிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது.[10][11] ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது.சுவீடியப்புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது.[12]

தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன.[13] சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.[14] ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது.

சிலவேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப்பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன.[15] அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது.

ஐரோப்பாவிலுள்ள நாடுகள்தொகு

நாடுகள்பரப்பளவு
(ச.கிமீ)
மக்கள் தொகை
(1 ஜூலை, 2002)
மக்கள் தொகை அடர்த்தி
(ச.கிமீ-க்கு)
தலைநகரம்
கிழக்கு ஐரோப்பா:
பெலாரஸ்207,60010,335,38249.8மின்ஸ்க்
பல்கேரியா110,9107,621,33768.7சோஃபியா
செக் குடியரசு78,86610,256,760130.1பிராக்
அங்கேரி93,03010,075,034108.3புடாபெஸ்ட்
மால்டோவா33,8434,434,547131.0சிஷினோ
போலந்து312,68538,625,478123.5வார்சா
ருமேனியா238,39121,698,18191.0புக்காரெஸ்ட்
இரசியா3,960,000106,037,14326.8மாஸ்கோ
சுலோவேகியா48,8455,422,366111.0பிராத்திஸ்லாவா
உக்ரைன்603,70048,396,47080.2கீவ்
வடக்கு ஐரோப்பா:
டென்மார்க்43,0945,368,854124.6கோப்பென்ஹாகென்
எத்தோனியா45,2261,415,68131.3தாலின்
பின்லாந்து336,5935,157,53715.3எல்சின்கி
ஐஸ்லாந்து103,000307,2612.7ரெய்க்யவிக்
அயர்லாந்து குடியரசு70,2804,234,92560.3டப்ளின்
இலத்துவியா64,5892,366,51536.6ரீகா
இலித்துவேனியா65,2003,601,13855.2வில்னியஸ்
நார்வே324,2204,525,11614.0ஓஸ்லோ
ஸ்வீடன்449,9649,090,11319.7ஸ்டாக்ஹோம்
ஐக்கிய இராச்சியம்244,82061,100,835244.2இலண்டன்
தெற்கு ஐரோப்பா:
அல்பேனியா28,7483,600,523125.2டிரானா
அன்டோரா46868,403146.2அன்டோரா லா வெல்லா
போசுனியா எர்சகோவினா51,1294,448,50077.5சரஜீவோ
குரோசியா56,5424,437,46077.7சாகிரேப்
கிரேக்கம்131,94010,645,34380.7ஏதென்சு
இத்தாலி301,23058,751,711191.6ரோம்
மாசிடோனிய குடியரசு25,3332,054,80081.1ஸ்கோப்ஜே
மால்டா316397,4991,257.9வலெட்டா
மாந்தநெக்ரோ13,812616,25844.6பொட்கொரிக்கா
போர்த்துகல்91,56810,084,245110.1லிஸ்பன்
தூய மரீனோ6127,730454.6தூய மரீனோ
செர்பியா88,3619,663,742109.4பெல்கிரேடு
சுலோவீனியா20,2731,932,91795.3லியுப்லியானா
ஸ்பெயின்504,85145,061,27489.3மாட்ரிட்
வத்திக்கான் நகர்0.449002,045.5வத்திக்கான் நகர்
மேற்கு ஐரோப்பா:
ஆஸ்திரியா83,8588,169,92997.4வியன்னா
பெல்ஜியம்30,51010,274,595336.8பிரசெல்சு
பிரான்ஸ்547,03059,765,983109.3பாரிசு
ஜெர்மனி357,02183,251,851233.2பெர்லின்
லீஷ்டென்ஸ்டைன்16032,842205.3வாடூஸ்
லக்செம்பூர்க்2,586448,569173.5லக்சம்பர்க்
மொனாக்கோ1.9531,98716,403.6மொனாக்கோ
நெதர்லாந்து41,52616,318,199393.0ஆம்ஸ்டர்டம்
சுவிஸர்லாந்து41,2907,507,000176.8பேர்ண்
நடுவண் ஆசியா:
கசாகிஸ்தான்150,000600,0004.0அஸ்தானா
மேற்கு ஆசியா:k[›]
அசர்பெய்ஜான்7,110175,20024.6பக்கூ
ஜார்ஜியா2,00037,52018.8திபிலீசி
துருக்கி24,37811,044,932453.1அங்காரா
மொத்தம்10,176,246o[›]709,608,850p[›]69.7

குறிப்புகள்தொகு

  1. Lewis & Wigen 1997, ப. 226
  2. "Global: UN Migrants, Population". Migration News. January 2010 Volume 17 Number 1.
  3. National Geographic, 534.
  4. Lewis, Martin W.; Wigen, Kären (1997). The myth of continents: a critique of metageography. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-20743-2. https://archive.org/details/mythofcontinents0000lewi. 
  5. Jordan-Bychkov, Terry G.; Jordan, Bella Bychkova (2001). The European culture area: a systematic geography. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7425-1628-8. https://archive.org/details/europeanculturea00jord_1. 
  6. Herodotus, 4:45
  7. Strabo Geography 11.1
  8. Franxman, Thomas W. (1979). Genesis and the Jewish antiquities of Flavius Josephus. Pontificium Institutum Biblicum. பக். 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:88-7653-335-4. 
  9. Norman F. Cantor, The Civilization of the Middle Ages, 1993, ""Culture and Society in the First Europe", pp185ff.
  10. Lewis & Wigen 1997, ப. 23–25
  11. Davies, Norman (1996). Europe: A History, by Norman Davies, p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-820171-7. http://books.google.com/books?id=jrVW9W9eiYMC&pg=PA8&dq=%22suggested+that+Europe%27s+boundary%22. பார்த்த நாள்: 2010-08-23. 
  12. Lewis & Wigen 1997, ப. 27–28
  13. Microsoft Encarta Online Encyclopaedia 2007 "Europe".. அணுகப்பட்டது 27 December 2007.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  14. Falconer, William; Falconer, Thomas. Dissertation on St. Paul's Voyage, BiblioLife (BiblioBazaar), 1872. (1817.), p 50, ISBN 1-113-68809-2 These islands Pliny, as well as Strabo and Ptolemy, included in the African sea
  15. "About the Council of Europe". Council of Europe. Archived from the original on 16 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 9 June 2008.

வெளி இணைப்புகள்தொகு

Historical Maps

"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=ஐரோப்பா&oldid=3849234" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)