எகிப்தின் பதினெட்டாம் வம்சம்

எகிப்தின் பதினெட்டாம் வம்சம் (Eighteenth Dynasty of Egypt) (Dynasty XVIII), எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட அரசமரபாகும். இவ்வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் புது எகிப்து இராச்சியம் அரசியல், சமூகம் மற்றும் கட்டிடக் கலைகளில் பெரும் புகழுடன் விளங்கியது. இவ்வம்சத்தை நிறுவியவர் முதலாம் அக்மோஸ் ஆவார். இப்பதினெட்டாம் வம்சம் பண்டைய எகிப்தை கிமு 1549/1550 முதல் கிமு 1292 முடிய 258 ஆண்டுகள் ஆண்டது. இப்பதினெட்டாவது வம்ச பார்வோன்களில் நான்கு பேர் தூத்மோஸ் என்ற பெயர் கொண்டதால், இவ்வம்சத்தை தூத்மோஸ் வம்சம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வம்சத்தாருக்கும் மெசொப்பொத்தோமியாவின் மித்தானி இராச்சியத்தினருக்கும் இடையே கடும் பகை இருந்தது.

கிமு 1549–கிமு 1292
தலைநகரம்தீபை, அமர்னா
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1549
• முடிவு
கிமு 1292
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதினேழாம் வம்சம்]]
[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]]

இவ்வம்சத்தின் முதலாம் அக்மோஸ், அக்கெனதென், துட்டன்காமன், மூன்றாம் அமென்கோதேப் உள்ளிட்ட பார்வோன்களில் பலர் புகழுடன் விளங்கினர். துட்டகாமனின் சிற்பங்களை ஹேவர்டு கார்ட்டர் என்பவரால் 1922-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய எகிப்தை ஆண்ட பல அரசமரபுகளில், பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்களில் இராணிகள் நெஃபர்டீட்டீ மற்றும் ஆட்செப்சுட்டு ஆகிய இரண்டு பெண் ஆட்சியாளர்கள் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டது குறிப்பிடத்தக்கது. [1]

வரலாறுதொகு

18-ஆம் வம்சத்தின் துவக்க ஆட்சிக் காலம்தொகு

அறியப்படாத 18-ஆம் வம்ச ஆட்சியாளரின் சுண்ணாம்புக்கலவை தலைச் சிற்பம், தீபை, எகிப்து லண்டன் தேசிய அருங்காட்சியகம்
18-ஆம் வம்சத்தின் துவக்க கால ஆட்சியாளரின் தலைச்சிற்பம், (கிமு 1539–1493) புருக்கிளீன் அருங்காட்சியகம்

எகிப்தின் பதினெட்டாம் அரசமரபை நிறுவியவர், எகிப்தின் பதினேழாவது வம்ச மன்னர் காமோசின் மகன் அல்லது சகோதரரான முதலாம் அக்மோஸ் ஆவார். இவரது ஆட்சிக் காலம், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது முடிவிற்றது. அதனைத் தொடர்ந்து புது எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. அக்மோசின் மகன் முதலாம் அமென்கோதேப் புது எகிப்திய இராச்சியத்தின் மன்னரானார். [2] முதலாம் அமென்கோதேப்பிற்கு ஆட்சி பீடமேறிய முதலாம் தூத்மோஸ் ஆட்சியின் போது எகிப்திய இராச்சியத்தை கிழக்கே மெசொப்பொத்தேமியாவின் யூப்பிரடீஸ் ஆறு வரையும், தெற்கே நைல் ஆறு உற்பத்தியாகுமிடம் வரை விரிவாக்கம் செய்தார். இவருக்குப் பின் இரண்டாம் தூத்துமோஸ் மற்றும் அவனது மனைவி அட்செப்சுத் (முதலாம் தூத்துமோசின் மகள்) எகிப்தை ஆண்டனர். பின்னர் இராணி அட்செப்சுத்தின் வளர்ப்பு மகன் மூன்றாம் தூத்மோஸ் இருபது ஆண்டுகள் எகிப்தை மிகப்பெரிய படை வலிமையுடன் ஆண்டார்.

பின்னர் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் அமென்கோதேப்ப்பின் ஆட்சிக்குப் பின்னர் மூன்றாம் அமென்கோதேப் ஆட்சி செய்தார். மூன்றாம் அமென்கோதேப்பின் ஆட்சிக் காலத்தில், எகிப்தில் பெரிய அளவிலான பிரமிடுகள் மற்றும் கட்டிட அமைப்புகள் கட்டப்பட்டது. இவர் நிறுவிய கட்டிட அமைப்புகளுக்கு நிகராக எகிப்தின் இருபத்தி ஒன்பதாவது வம்ச மன்னர் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் எகிப்தில் பெரிய அளவிலான கட்டிட அமைப்புகள் நிறுவப்பட்டது.[3]

அக்கெனதென், அமர்னா காலம், மற்றும் துட்டன்காமன்தொகு

அதின், சூரியக் கடவுள்
it
n
ra
பார்வோன் அக்கெனதென் தன் குடும்பத்துடன் அதேன் எனும் சூரியக் கடவுளை வழிபடும் சிற்பம்

மூன்றாம் அமென்கோதேப் தன் மகன் நான்காம் அமென்கோதேப்புடன் பனிரெண்டு ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டு ஆண்டார். இந்த ஆட்சிக் காலத்தின் ஐந்தாம் ஆண்டில் நான்காம் அமென்கோதேப் தனது பெயரை அக்கெனதென் எனப்பெயர் மாற்றம் செய்து கொண்டு, தனது தலைநகரத்தை தீபையிலிருந்து அமர்னாவிற்கு மாற்றிக் கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அதின் எனும் சூரியக் கடவுளின் வழிபாடு முதன்மைப் பெற்றது.[4]

பார்வோன் அக்கெனேதனின் மறைவிற்குப் பின்னர் அவரது இராணி நெஃபர்டீட்டீ ஆட்சிக் கட்டிலில் ஏறினார். பின்னர் இராணி நெபெர்திதியை வீழ்த்தி துட்டன்காமன் அரியணை ஏறினார். ஆனால் இளவயதில் துட்டகாமன் மாண்டார். [5]

ஆய் மற்றும் ஹோரம்ஹேப்தொகு

பார்வோன் ஆயின் தலைச்சிற்பம், கிமு 1336–1327, புருக்ளீன் அருங்காட்சியகம்

எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் இறுதி இரு மன்னர்களான ஆய் மற்றும் ஹோரம்ஹேப் ஆகியோர் எகிப்திய அரண்மனையின் அதிகாரிகளாக இருந்தவர்கள். மன்னர் துட்டகாமனின் விதவைச் சகோதரியை மணந்தவர் ஆய். வாரிசு இன்றி குறுகிய காலம் ஆண்ட மன்னர் ஆய்யை, எகிப்தின் படைத்தலைவர் ஹொரெம்ஹெப், இராணுவப் புரட்சியின் மூலம் எகிப்தின் மன்னரானார். [5] ஆண் குழந்தை இல்லாத மனன்ர் ஹோரேம்ஹெப், முதலாம் ராமேசஸ் என்பவரை தனது வாரிசாக அறிவித்து இறந்தார்.கிமு 1292-இல் அரியணை ஏறிய முதலாம் ராமேசஸ் பத்தொன்பதாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆக முடிசூட்டிக் கொண்டார்.

எகிப்திய பார்வோன் மற்றும் தலைமை பூசாரியுமான ஆய்-இன் சுண்ணாம்புக்கலவைச் சிற்பங்கள்

காலக் கணிப்புதொகு

கதிரியக்கக்கரிமக் காலக் கணிப்பின்படி எகிப்தின் 18-ஆம் வம்ச காலத்தின் தொடக்கம் கிமு 1550-1544 எனக்கணிக்கப்பட்டுள்ளது.[6]

பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்கள்தொகு

எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன்கள் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1550 முதல் கிமு 1298 முடிய 250 ஆண்டுகள் ஆண்டனர்.[7] இப்பார்வோன்களில் பலரை தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டனர்.[8]

பண்டைய அண்மை கிழக்கின் நகர இராச்சியங்களின் அரச குடும்ப இளவரசிகளை, 18-ஆம் வம்ச மன்னர்கள் மணந்ததை ஆப்பெழுத்து களிமண் பலகைகளில் ஆவணப்படுத்தியுள்ளதை தீபை நகரத் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த அமர்னா நிருபங்கள் மூலம் அறியப்படுகிறது.[9]

பார்வோன்உருவம்இயற்பெயர்ஆட்சிக் காலம்கல்லறைதுணைவிகள்குறிப்புகள்
முதலாம் அக்மோஸ் நெப்பெடயர்கிமு 1549–1524அரசி அக்மோஸ்-நெபர்தாரி
அக்மோஸ்-ஹெனுட்டாமேகு
அக்மோஸ்-சித்காமோஸ்
கீழ் எகிப்தின் 15-ஆம் வம்ச பிலிஸ்தியர்களை வென்றவர்.
முதலாம் அமென்கோதேப் ஜெசர்கரேகிமு 1524–1503[[KV ***அக்மோஸ்-மெரிதமுன்
முதலாம் தூத்மோஸ் ஆக்கேபெர்கரேகிமு 1503–1493KV20, KV38இராணி அக்மோஸ்
முத்னோபிரேட்
கீழ் எகிப்தின் ஐக்சோஸ் எனும் பிலிஸ்திய 15-ஆம் வம்சத்தவர்களை வென்றவர்
இரண்டாம் தூத்மோஸ் ஆக்கேம்பெரேன்ரேகிமு 1493–1479KV42இராணி ஆட்செப்சுட்டு
இராணி இசெத்
அரசி ஆட்செப்சுட்டு மாட்கரேகிமு 1479–1458KV20இரண்டாம் தூத்மோஸ்
மூன்றாம் தூத்மோஸ் மென்கெப்பர்கிமு 1479–1425KV34சதியா
மெரித்திரி-அட்செப்சுத்
நெப்புத்து
மெர்தி
இரண்டாம் அமென்கோதேப் ஆக்கேபெருரேகிமு 1427–1397KV35தியா
நான்காம் தூத்மோஸ் மென்கெபெருரேகிமு 1397–1388KV43நெபெர்தாரி
லாரட்
முதேம்வியா
மித்தானி அரசர் முதலாம் அர்ததாமாவின் மகள்
மூன்றாம் அமென்கோதேப் நெப்மாத்திரேகிமு 1388–1351KV22அரசி தியே
மித்தானி இளவரசி கிலுக்கிபா
மித்தானி இளவரசி தடுக்கிபா
சீதாமூன்
இசத் (மூன்றாம் அமென்கோதேப்பின் மகள்)
பாபிலோன் மன்னர் குரிகல்சுவின் மகள்[9]
பாபிலோன் அரசர் என்லில்லின் மகள்[9]
அக்கெனதென் நெபர்கேபேரெருரே-வாயின்ரேகிமு 1351–1334அக்கேனேதெனின் அரச கல்லறைநெபெர்திதி
கியா
மித்தானி இளவரசி தடுக்கிபா
சதியா நாட்டு இளவரசி[9]
பாபிலோன் நாட்டரசர் பர்ன-புருரியாசின் மகள் [9]
சுமென்க்கரேகிமு 1335–1334,
அரசி நெபெர்நெப்ரதென் அன்கேபெரேகிமு 1334–1332
துட்டன்காமன் நெப்கெபெருரேகிமு 1332–1323KV62அங்கேசனம்
ஆய் கெபெர்ஹெபெரேரிகிமு 1323–1319KV23அங்கேசேனமுன்
தேய்
ஹொரெம்ஹெப் ஜெசெர்கேபெருரே-செத்தேபென்ரேகிமு 1319–1292KV57முத்னேத்மெத்
அமேனியா

பதினெட்டாம் வம்சத்தின் காலக்கோடுகள்தொகு

HoremhebAyTutankhamunNeferneferuatenSmenkhkareAkhenatenAmenhotep IIIThutmose IVAmenhotep IIThutmose IIIHatshepsutThutmose IIThutmose IAmenhotep IAhmose I

படக்காட்சிகள்தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசைதொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Daniel Molinari (2014-09-16), Egypts Lost Queens, பார்க்கப்பட்ட நாள் 2017-11-14
  2. Aidan Dodson, Dyan Hilton: pg 122
  3. Aidan Dodson, Dyan Hilton: pg 130
  4. Aidan Dodson; Hilton, Dyan (2010). The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-28857-3. https://books.google.com/books?id=ONKiQAAACAAJ&pg=PA142. 
  5. 5.0 5.1 Aidan Dodson; Hilton, Dyan (2010). The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-28857-3. https://books.google.com/books?id=ONKiQAAACAAJ&pg=PA143. 
  6. Christopher Bronk Ramsey et al., Radiocarbon-Based Chronology for Dynastic Egypt, Science 18 June 2010: Vol. 328. no. 5985, pp. 1554–1557.
  7. Aidan Dodson, Dyan Hilton: The Complete Royal Families of Ancient Egypt. The American University in Cairo Press, London 2004
  8. "Sites in the Valley of the Kings". Theban Mapping Project. 2010. Archived from the original on 25 July 2010. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Grajetzki, Ancient Egyptian Queens: A Hieroglyphic Dictionary, Golden House Publications, London, 2005, ISBN 978-0954721893

ஆதார நூற்பட்டியல்தொகு

வெளி இணைப்புகள்தொகு


🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)